உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு குறித்து கார்கே கருத்து
உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு குறித்து கார்கே கருத்து
ADDED : ஜூலை 03, 2024 02:22 PM

புதுடில்லி: 'பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியது, உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை துவக்கிய சிறிது நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கம் எழுப்பினர். பிறகு, ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ராஜ்யசபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி பேசியது, உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். பொய் சொல்வது அவரது வழக்கம்.
உருவ பொம்மை
சில தவறான விஷயங்களை சபையில் கூறியதால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அரசியலமைப்பு சட்டத்தை அவர்கள் எதிர்த்தனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் யார் செயல்படுகின்றனர் என்பதை மக்களுக்கு நான் தெளிவுப்படுத்தினேன். அம்பேத்கர் மற்றும் நேருவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். ஆனால், அம்பேத்கரை நாங்கள் அவமரியாதை செய்தோம் என மோடி லோக்சபாவில் பேசி உள்ளார். இவ்வாறு கார்கே கூறினார்.