சித்தராமையா அரசியலில் இதுவே கடைசி கட்டம்: மகன் சொன்ன தகவலால் பரபரப்பு
சித்தராமையா அரசியலில் இதுவே கடைசி கட்டம்: மகன் சொன்ன தகவலால் பரபரப்பு
ADDED : அக் 22, 2025 07:43 PM

பெங்களூர்: தனது கடைசி கட்ட அரசியலில் இருக்கிறார் முதல்வர் சித்தராமையா என அவரது மகன் யதீந்திர சித்தராமையா வெளியிட்டுள்ள கருத்து கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராகவும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் டி.கே.சிவக்குமார் செயல்பட்டு வருகிறார்.
கர்நாடகாவில் மூடா மனை ஒதுக்கீடில் நடந்த முறைகேடு விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்து, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என, கடந்தாண்டு ஆகஸ்டில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. ஆனால் ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். கடந்த அக்.01-ம் தேதியன்று தசரா விழாவில் பங்கேற்றுபேசியபோது ஐந்தாண்டுகள் முழுமையாக நானே முதல்வராக இருப்பேன் என்றார்.
இந்நிலையில் சித்தராமையா மகனும் காங்கிரஸ் மேல்சபை உறுப்பினருமான யதீந்திர சித்தராமையா கூறியதாவது, முதல்வர் சித்தராமையா தனது கடைசி கட்ட அரசியலில் இருக்கிறார் என தெரிவித்துள்ளது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன அர்த்தத்தில் அவர் அவ்வாறு கூறினார் என்பது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்