ADDED : பிப் 05, 2025 02:41 AM

உத்தர கன்னடா :கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில மீன்வள துறை அமைச்சரான மங்கள் வைத்யா, கார்வாரில் நேற்று அளித்த பேட்டி:
உத்தர கன்னடா மாவட்டத்தில், பசுக்கள் பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கைதானவர்கள் ஏற்கனவே இதுபோன்று பல வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள்.
பசுக்களின் பாலை நாம் குடிக்கிறோம். தெய்வமாக நாங்கள் வணங்கும் பசுக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும். இனிவரும் நாட்களில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பசுக்கள் கொல்லப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
பேசும்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும். பா.ஜ., ஆட்சிக் காலத்திலும் பசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. ஆனால், பா.ஜ., இவ்விஷயத்தில் அரசியல் செய்கிறது. பசுவை கொன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசுக்களை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வரும், உள்துறை அமைச்சரும் உத்தரவிட்டுள்ளனர். வருங்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்களை சுட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.