மாலியில் பயங்கரவாதிகளால் மூன்று இந்தியர்கள் கடத்தல்
மாலியில் பயங்கரவாதிகளால் மூன்று இந்தியர்கள் கடத்தல்
ADDED : ஜூலை 04, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் பணியாற்றி வந்த நம் நாட்டை சேர்ந்த மூவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
மாலியில் உள்ள ராணுவ நிலைகள் மீது அல் - குவைதாவின் துணை அமைப்பான ஜமாத் - நுஸ்ரத் - அல் - இஸ்லாம் - வால் - முஸ்லிமின் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகின்றது.
கடந்த 1ம் தேதி, கெய்ஸ் பகுதி வைர தொழிற்சாலைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு பணியில் இருந்த நம் நாட்டை சேர்ந்த மூன்று ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
மாலியில் உள்ள இந்திய துாதரகம் இந்தியர்களை பத்திரமாக மீட்க அந்நாட்டு அரசின் உதவியை நாடியுள்ளது.