ADDED : மே 18, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி: கர்நாடகாவின் சிந்தாமணி பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர்கள் ஐந்து பேர், ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் பிளேரு பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் தமிழகத்தின் ஓசூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆந்திராவின் குருவபள்ளி அருகே நேற்று அதிகாலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர கிணற்றில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது.
இதில் காரில் இருந்த சுனில், திப்பா ரெட்டி ஆகியோர் கார் கண்ணாடியை உடைத்து வெளியேறி காயத்துடன் உயிர் தப்பினர். லோகேஷ், சலபதி, சிவாண்ணா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். போலீசார், மீட்புப்படையினர் கிரேன் உதவியுடன் கார் மற்றும் மூவரின் உடல்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் துாங்கியதால் கிணற்றில் கார் கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.