ADDED : பிப் 06, 2025 11:29 PM
சட்டசபைத் தேர்தலில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைத் தேர்தலில் 21,584 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20,692 கட்டுப்பாட்டு அலகுகள், 18,943 வி.வி., பேட்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்குப் பின் இவை அனைத்தும் பாதுகாப்பாக, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மாநிலத்தின் 11 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 19 ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாதுகாப்பு அறைக்கும் துணை ராணுவப்படையினர் இரண்டு அடுக்குகளிலும், மூன்றாவது அடுக்கில் கூடுதல் துணை காவல் ஆணையர் தலைமையிலான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தவிர 19 மையங்களிலும் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும்.
- நமது நிருபர் -