லாரி மோதி பஸ் கவிழ்ந்து விபத்து: ம.பி.,யில் மூன்று பயணியர் பலி
லாரி மோதி பஸ் கவிழ்ந்து விபத்து: ம.பி.,யில் மூன்று பயணியர் பலி
UPDATED : ஜூன் 15, 2026 05:57 PM
ADDED : ஜூன் 15, 2026 05:01 PM
போபால்:மத்திய பிரதேசத்தில், பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார், பஸ் மீது அடுத்தடுத்து மோதியதில், பஸ்சில் பயணித்த மூவர் உயிரிழந்தனர்.
ம.பி.,யின் கட்னியில் இருந்து விஜய்ராகவ்கார் என்ற இடத்துக்கு, 35 பயணியருடன் பஸ் ஒன்று புறப்பட்டது. குத்லா என்ற பகுதியில், தொழிற்பேட்டை அருகே நேற்று முன்தினம் வந்தபோது, எதிரே வந்த லாரி பிரேக் பழுதானதால், கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது. மேலும், கார் மீதும் மோதியது. இதில், பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பயணித்த மூவர் பலியாகினர். லாரி டிரைவர் உட்பட 29 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
