தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: சங்கராபுரம் அருகே பரிதாபம்

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: சங்கராபுரம் அருகே பரிதாபம்

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: சங்கராபுரம் அருகே பரிதாபம்


UPDATED : ஜூன் 15, 2026 05:32 PM

ADDED : ஜூன் 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 05:32 PM ADDED : ஜூன் 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் உட்பட 2 பேர் இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வடபாலபட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, 45; நேற்று முன்தினம் சங்கராபுரம் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் செல்வி, மாடியில் காயபோட்டிருந்த துணிகளை எடுக்க சென்றார்.

அப்போது, மாடியில் தகர கொட்டகை மீது மின் ஒயரை இரும்பு கம்பியால் கட்டி வைத்ததில் மின் ஒயர் சேதமாகி மின்கசிவு ஏற்பட்டு தகர கொட்கை முழுதும் மின்சாரம் பரவியிருந்தது.

மேலும் தகரகொட்டகை மீது உரசியபடி இருந்த இரும்பு கம்பியில் துணி காய போட்டிருந்ததால் இரும்பு கம்பி மீதும் மின்சாரம் பரவி இருந்தது. இதை அறியாமல் துணிகளை எடுத்தபோது மின்சாரம் தாக்கியதில் செல்வி இறந்தார்.

இதனையறிந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த விவசாயி கணேசன், 45; ஓடிவந்து செல்வியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us