மூன்று கோள்கள் சங்கமம்: ஏப்.25ல் விண்வெளியில் வரப்போகுது 'சிரிப்பு எமோஜி'
மூன்று கோள்கள் சங்கமம்: ஏப்.25ல் விண்வெளியில் வரப்போகுது 'சிரிப்பு எமோஜி'
UPDATED : ஏப் 19, 2025 07:37 PM
ADDED : ஏப் 19, 2025 07:08 PM

புதுடில்லி: வரும் ஏப்.25ம் தேதி, அன்று வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு சங்கமமாகும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.
வரும் ஏப்ரல் 25ம் தேதியில் வெள்ளி மற்றும் சனி கோள்கள் அருகாமையில் சங்கமிக்க இருக்கின்றன. இந்த இரண்டு கோள்கள் அருகருகே வரும் போது, அதற்கு கீழே வரும் பிறை நிலா, பார்க்கும் போது சிரிக்கும் எமோஜி போல காட்சியளிக்கும்.இந்த நிகழ்வு அதிகாலையில், சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காணலாம்.இந்த மூன்று கோள்களும் பளிச்சென காட்சியளிக்கும் என்பதால், சாதாரண கண்களாலேயே பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது குறித்து நாசா சூரிய மண்டல தூதர் பிரெண்டா கல்பர்ட்சன் கூறியதாவது:
ஏப்ரல் 25ம் தேதி காலையில், வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு ஆகியவை அதிகாலை வானத்தில் ஒன்றாக நெருக்கமாகத் தோன்றும், இது ஒரு புன்னகை முகத்தை நினைவூட்டும் ஒரு முக்கோண அமைப்பை உருவாக்கும்.
கிழக்கு அடிவானத்திற்கு மேலே உயரத்தில் வெள்ளி, சனி கிரகம் இருக்கும். மேலும் ஒரு மெல்லிய பிறை நிலவு சற்று கீழே இருக்கும். இது ஒரு புன்னகை போல் தெரியும். சிலருக்கு, பிரகாசமான ஒரு புன்னகை முகமாகத் தோன்றலாம்.
இவ்வாறு கல்பர்ட்சன் கூறினார்.