துப்பாக்கி சண்டைக்கு பின் மூன்று குற்றவாளிகள் கைது
துப்பாக்கி சண்டைக்கு பின் மூன்று குற்றவாளிகள் கைது
ADDED : மார் 20, 2025 10:35 PM
ரோஹிணி: பேகம்பூர் பகுதியில் போலீசாருடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், பேகம்பூர் பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பன்சாலி சாலையில் தடுப்புகள் அமைத்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியே வந்த காரை நிறுத்த போலீசார் முயன்றனர். இதனால் காரில் இருந்தவர்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினர். போலீசார் பதிலடி கொடுத்து, கோவிந்த் என்ற கோஹ்லி, 33, கிருஷ்ணா என்ற கின்ஹா, தாவுத் என்ற சமீர் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
போலீசார் சுட்டதில் கோவிந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவிந்த் மீது 70 வழக்குகளும் கிருஷ்ணா மீது 16 வழக்குகளும் தாவுத் மீது 10 வழக்குகளும் உள்ளன.