sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜ்யசபாவில் மூன்று பெண் எம்.பி.,க்கள் மோதல்!

/

ராஜ்யசபாவில் மூன்று பெண் எம்.பி.,க்கள் மோதல்!

ராஜ்யசபாவில் மூன்று பெண் எம்.பி.,க்கள் மோதல்!

ராஜ்யசபாவில் மூன்று பெண் எம்.பி.,க்கள் மோதல்!

21


ADDED : பிப் 15, 2026 05:54 AM

Google News

21

ADDED : பிப் 15, 2026 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு பக்கம் பார்லிமென்டின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கினாலும், சில சமயம் அருமையான விவாதங்கள், கேள்வி - பதில்கள் நடக்கும். சமீபத்தில் இப்படி ஒரு விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. மூன்று பெண் எம்.பி.,க்கள் மோதிக் கொண்டனர்.

முன்னாள் ஹிந்தி நடிகை ஜெயா பச்சன். இவர் நடிகர் அமிதாப்பின் மனைவி; சமாஜ்வாதி எம்.பி., இவருக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ஆகாது.

நிதி அமைச்சர் நிர்மலா சபையில் இருந்தபோது ஜெயா பச்சன் கேள்வி எழுப்ப அனுமதி கேட்டார். சபைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்தார். 'சினிமா மீது கேளிக்கை வரி அதிகமாக உள்ளது. இதை நீக்க நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார்?' என கேட்டார் ஜெயா.

உடனே, காங்., - எம்.பி., ரேணுகா சவுத்ரி, ஜெயாவுடன் சேர்ந்து கொண்டார். கிண்டலும், கேலியுமாக பேசுவது இவரது வழக்கம். 'நிதி அமைச்சருக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும்; அவர், தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்திருப்பாரா?' என, கேலியாக கூறினார் ரேணுகா.

அமைதியாக இருவரது பேச்சையும் கேட்ட நிதி அமைச்சர் நிர்மலா, உடனே, 'தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகம் என்பதால், மக்கள் ஓ.டி.டி., பக்கம் சென்றுவிட்டனர்; கேளிக்கை வரி விதிப்பது, மாநில அரசுகள். எனவே, மாநில அரசை ஜெயா கேட்க வேண்டும்' என்றார்.

வெறுத்துப் போன ஜெயா பச்சன், தலையைப் பிடித்துக் கொண்டு வெளியேறினார். இந்த மூன்று பெண் எம்.பி.,க்கள் மோதலை, புன்னகையுடன் பார்த்தார் சபைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.






      Dinamalar
      Follow us