தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மாரத்தஹள்ளியில் இன்று தியாகராஜ ஆராதனை

மாரத்தஹள்ளியில் இன்று தியாகராஜ ஆராதனை

மாரத்தஹள்ளியில் இன்று தியாகராஜ ஆராதனை


ADDED : ஜன 27, 2024 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாரத்தஹள்ளி: பெங்களூரு 'திரிகலா ஹவுஸ் ஆப் பைன் ஆர்ட்ஸ்' சார்பில் இன்று மாரத்தஹள்ளியில் தியாகராஜ ஆராதனை நடத்தப்படுகிறது.

இன்று மாரத்தஹள்ளி வாக்தேவி பள்ளி வளாகத்தில் நடக்கும் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பெங்களூரு, சென்னையில் இருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் இப்பகுதியில், முதன்முறையாக தியாகராஜ ஆராதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

காலை 10:30 மணிக்கு தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதியின் கோஷ்டி காயனா, மதியம் 1:30 மணிக்கு ராமா ஹனுமந்தா - கருப்பொருளை அடையாளமாக வைத்து இசைக் கச்சேரி நடக்கிறது. இதற்கு அனுமதி இலவசம்.

மாலை 4:15 மணிக்கு தியாக புஷ்பம் - நாட்டியம், சங்கீதம், கதை ஆகிய மூன்றும் இணைந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு டிக்கெட் பெற வேண்டும்.

காலை முதல் மாலை வரை நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்கஉள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு 73377 78644 என்ற மொபைல் எண்ணிலும், www.trikalaarts.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us