ம.பி.யில் சோகம்! கழுத்தில் கம்பி இறுக்கியதில் புலி உயிரிழப்பு!
ம.பி.யில் சோகம்! கழுத்தில் கம்பி இறுக்கியதில் புலி உயிரிழப்பு!
ADDED : மார் 03, 2025 11:26 AM

பாலாகட்: மத்திய பிரதேசத்தில் கம்பி வேலியில் சிக்கிய புலி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மத்திய பிரதேசம் பாலாகட் மாவட்டத்தில் கடாங்கி பகுதியில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் புலி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் கழுத்து கம்பி வேலியில் சிக்கி இறுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி பாபுலால் சத்தார் கூறியதாவது; எங்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இங்கே வந்தோம். புலி உயிரிழந்துள்ளது. கம்பிவேலியில் அதன் கழுத்து இறுக்கப்பட்டு, பட்டிடனியாலும், நீர்ச்சத்து இல்லாததாலும் இறந்துள்ளது.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் இடம் பெயரும் போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.