sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

/

உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

26


UPDATED : ஜூலை 02, 2024 05:07 PM

ADDED : ஜூலை 02, 2024 04:45 PM

Google News

UPDATED : ஜூலை 02, 2024 05:07 PM ADDED : ஜூலை 02, 2024 04:45 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது '' என பிரதமர் மோடி லோக்சபாவில் பேசினார்.

பதிலுரை


ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தேஜ கூட்டணிக்கு தான் ஓட்டு போட்டனர். மக்கள் எங்களின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து ஓட்டு போட்டனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுவுக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையே மகேசன் சேவை என நாங்கள் செயல்பட்டதை அங்கீகரித்து உள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் பிதற்றி வருவது கண்கூடாக தெரிகிறது.

சகித்து கொள்ள முடியாது


இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே வியந்து வருகிறது.10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ள எமது அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். எக்காரணத்தை கொண்டும் ஊழலை சகித்து கொள்ள முடியாது.

இந்தியாவுக்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம். இந்தியாவின் மதிப்புசர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.ஓட்டு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். இது நாட்டை நாசப்படுத்தியது

முடிவு


அனைவருக்குமான நீதி என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தான் இந்த நாட்டை அழித்து கொண்டு இருந்தது. இந்த அரசியலுக்கு இம்முறை மக்கள் முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர். ஊழலுக்கும், திருப்திபடுத்தும் அரசியலுக்கும் மக்கள் முடிவு கட்டினர். எதிர்வரும் தலைமுறைக்கு வலிமையான பாரதத்தை உருவாக்குவதன் மீதே எங்களின் கவனம் உள்ளது. உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது.

திட்டங்கள்

வளர்ச்சியடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தனர். 2047 ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார். அதுனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சபாநாயகர் கண்டிப்பு

பிரதமர் மோடி பதிலுரையை துவங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் போட்டபடியே இருந்தனர். ‛மணிப்பூர்... மணிப்பூர்...' எனவும், நீதி வேண்டும் எனவும், கோஷம் போட்டதுடன் மேஜையை தட்டினர். மணிப்பூர் குறித்து பதிலளிக்க வேண்டும் என இடையூறு ஏற்படுத்தும் கோஷம் போட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‛‛ எம்.பி.,க்கள் அனைவரும் அவை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தில் பேசுங்கள். பிரதமர் பேச்சின் போது எதிர்க்கட்சியினரின் அமளி மிகவும் தவறான செயல் என கண்டித்தார்.








      Dinamalar
      Follow us