மாட்டுக் கொழுப்பு விவகாரம்: திருப்பதி லட்டு விற்பனை நிலவரம் இதுதான்!
மாட்டுக் கொழுப்பு விவகாரம்: திருப்பதி லட்டு விற்பனை நிலவரம் இதுதான்!
ADDED : செப் 22, 2024 02:00 PM

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நேற்று 3.66 லட்சம் லட்டுகள் விற்பனையாகின.
புகழ்பெற்ற திருப்பதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்புகள் கலக்கப்பட்ட விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நாளை முதல் 3 நாட்கள் பரிகார பூஜை நடக்க இருக்கும் நிலையில், திருப்பதி லட்டுக்கான வரவேற்பு கடந்த சில நாட்களாக குறைந்திருத்தாக கூறப்பட்டது.
செப்டம்பர் 19ம் தேதி மட்டும் லட்டு விற்பனையில் சிறிது ஏற்றம் இருந்தது. அன்று மட்டும் 3.59 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 20ம் தேதி 3.16 லட்சம் லட்டுகளே விற்பனையாகி இருந்தது. நேற்றைய தினம் பார்த்தால் லட்டுக்கள் விற்பனை ஏறுமுகம் நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது.
20ம் தேதி 3.16 லட்சம் லட்டுகள் என்ற நிலைமை உல்டாவாகி நேற்று 3.66 லட்சம் லட்டுகள் விற்பனையாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நாளில் 50 ஆயிரம் லட்டுகள் கூடுதலாக சேல்ஸ் ஆகி இருக்கின்றன.
என்னதான் சர்ச்சைகள் சுழன்று அடித்தாலும், திருப்பதி லட்டு லட்டுதான், விற்பனையை அசைக்க முடியாது என்று சொல்லாமல் சொல்கிறது நேற்றைய விற்பனை நிலவரம்.