ADDED : மார் 30, 2025 03:54 AM

மத்திய அரசு, வங்கிகளை வசூல் ஏஜென்ட் நிலைக்கு கீழிறக்கி, மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறது. 2018 - 2024 வரை வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று, 43,500 கோடி ரூபாய் வசூலித்தனர். தற்போது ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
லாலுவால் வீழ்ச்சி!
பீஹார் மாநிலம் 1970களில் வளர்ச்சியில் இருந்தது. அது லாலு பிரசாத் ஆட்சியால் வீழ்ச்சிக்கு சென்றது. அப்போது இரவு நேரங்களில் யாரும் பீஹாரில் தைரியமாக நடமாட முடியாது. டாக்டர்கள் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடினர். தொழில்கள் மூடப்பட்டன. இதை தான் காட்டாட்சி என்கிறோம்.
நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
விவாதங்களை தவிர்க்கின்றனர்!
பார்லிமென்டில் விவாதத்தை தவிர்க்க ஏதாவது ஒரு வழியை பின்பற்றுவதை பா.ஜ., - எம்.பி.,க்கள் கொள்கையாக வைத்துள்ளனர். பார்லிமென்டில் ஜனநாயக செயல்முறையை மத்திய அரசு தடுக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் செயல்பாட்டை கெடுப்பதாக பழிபோடுகின்றனர்.
பிரியங்கா, லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்