நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று வெயில் சுட்டெரித்த நிலையில், இன்று மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டில்லியில் வெப்பநிலை நேற்று, 40.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 0.4 டிகிரி அதிகம் என, கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், டில்லியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியஸ் வரை எதிர்பார்க்கலாம் எனவும் கணித்துள்ளது.