நாளை அரசியல் அமைப்பு சட்ட மாநாடு பெங்களூரில் போக்குவரத்து மாற்றம்
நாளை அரசியல் அமைப்பு சட்ட மாநாடு பெங்களூரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 24, 2024 04:32 AM
பெங்களூரு : இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு நிறைவு மாநாட்டையொட்டி, பெங்களூரில் நாளை பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு நிறைவு மாநாடு நாளை கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானம் கிருஷ்ண விஹாரில் நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதால், சில வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை:
நகரில் இருந்து மாநாட்டுக்கு வரும் பஸ்கள், வின்சர் மேனர் சந்திப்பு, பி.டி.ஏ., ஆப் காம்ப்ளக்ஸ், ரமணமகரிஷி சாலையில் உள்ள பி.ஜி., ஹள்ளி பஸ் நிலையம், காவேரி சந்திப்பு, மேக்ரி சதுக்கம் சர்வீஸ் சாலை வழியாக வந்து வலதுபுறம் திரும்ப வேண்டும்.
ஜெயமஹால் சாலை வழியாக சென்று, டி.வி., டவர் அருகே நுழைவு வாயில் வழியாக நுழைந்து, சர்க்கஸ் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பல்லாரி சாலை வழியாக வரும் வாகனங்கள், மேக்ரி சதுக்கத்தில் இடதுபுறம் திரும்பி, ஜெயமஹால் சாலையில் வழியாக சென்று சர்க்கஸ் மைதானத்தில் வாகனங்களை நிறத்த வேண்டும்.
யஷ்வந்த்பூர் வழியாக வருபவர்கள், சர் சி.வி., ராமன் சாலை, பி.எச்.இ.எல்., சதுக்கம், சதாசிவ நகர், மேக்ரி சதுக்கம், ஜெயமஹால் சாலை வழியாக சென்று டிவி டவர் அருகே உள்ள சர்க்கஸ் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக வருபவர்கள், ஜெயமஹால் சாலை வழியாக சென்று டிவி டவர் அருகில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இங்கு வரும் நான்கு சக்கரம், இரு சக்கர வாகனங்கள், அரண்மனை மைதானத்தின் நுழைவு எண் 2, 4ல் வழியாக வர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.