ADDED : ஜன 19, 2025 02:38 AM

மூணாறு:மூணாறில் மதுபோதையில் எஸ்.ஐ.,யின் சீருடையை கிழித்து பீர் பாட்டிலால் குத்த முயன்ற சுற்றுலா வழிகாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மூணாறு நகரில் மையப்பகுதியில் உள்ள மவுண்ட் கார்மல் பேரலாயம் செல்லும் படிக்கட்டில் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நான்கு பேர் கொண்ட கும்பல் மது அருந்தியது.
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதால், எஸ்.ஐ., அஜேஸ் கே. ஜான் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அப்போது மூன்று பேர் தப்பி ஓடிவிட்ட நிலையில், டாடா மருத்துவமனை குடியிருப்பை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி அஸ்வின் 24, மதுபோதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்து, அவரது சீருடையை கிழித்து பீர்பாட்டிலை உடைத்து குத்த முயன்றார். போலீசார் கடுமையாக போராடி அஸ்வினை கைது செய்தனர்.
அவர், ரவுடி பட்டியலில் உள்ளவர் என போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

