சுற்றுலா தலங்களுக்கு விரைவில் பஸ்களை இயக்க சுற்றுலா துறை முடிவு
சுற்றுலா தலங்களுக்கு விரைவில் பஸ்களை இயக்க சுற்றுலா துறை முடிவு
ADDED : அக் 10, 2025 10:58 PM
புதுடில்லி:டில்லி நகருக்கு செல்லும் சுற்றுலா பயணியர் விரைவில், பர்ப்பிள் நிற பஸ்களில் முக்கியமான சுற்றுலா கேந்திரங்களுக்கு செல்ல உள்ளனர். இதனால், தலைநகரில் சுற்றுலா மையங்கள் இல்லை என்ற குறை இல்லாமல் போகும்.
குறிப்பாக, பிரதான்மந்திரி சங்கராலயாவில் துவங்கி, பாரத் மண்டவம், போர் வீரர் நினைவிடம், புதிய பார்லிமென்ட் வளாகம், டில்லி ஹாத் போன்ற பல இடங்களுக்கு செல்லும் வகையில், பர்ப்பிள் நிற பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மாலை நேரங்களில் இந்த பர்ப்பிள் நிற பஸ்கள், முக்கிய பொழுதுபோக்கிடங்களை இணைக்கும் வகையில் இணைக்கப்பட உள்ளன. இந்த பஸ்களில் பயணிக்க பெரியோர்களுக்கு, 500 ரூபாய், சிறியவர்களுக்கு 300 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 6 - 7 ஒன்பது மீட்டர் பஸ்களை வாடகைக்கு வாங்கியுள் ளோம் என, சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பஸ்சில், கெய்டு ஒருவரும் பயணிப்பார். அவர், முக்கிய இடங்கள் வரும் போது, பயணியருக்கு அந்த இடத்தின் பெருமை குறித்து, அனைவருக்கும் கேட்கும் வகையில், மைக்கில் பேசுவார்.