ADDED : அக் 10, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பள்ளி மாணவியர், 17 பேரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சர்ச்சைக்குரிய சாமியார் சைதன்யானந்தாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, டில்லி கோர்ட்டில் வரும் திங்கள் கிழமை நடக்கிறது.
சாமியார் சைதன்யானந்தா, இப்போது சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அடுல் அஹலவத் தானாக விசாரணை யிலிருந்து விலகினார்.
அதையடுத்து, சாமியாரின் ஜாமின் வழக்கு, பட்டியாலா ஹவுஸ் செஷன்ஸ் முதன்மை நீதிபதியால், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தீப்தி தேவேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர், வரும் திங்கள் கிழமை சாமியாரின் ஜாமின் மனுவை விசாரிக்க உள்ளார்.