sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உடுப்பி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணியர்

/

உடுப்பி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணியர்

உடுப்பி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணியர்

உடுப்பி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணியர்


ADDED : நவ 27, 2024 04:27 AM

Google News

ADDED : நவ 27, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி: மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளதால், நீர் சாகச விளையாட்டுகளை பார்க்க வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

உடுப்பி மாவட்டம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது கோவில்கள். அதன் பின்னரே, கடற்கரைக்கு சுற்றுலா பயணியர் முக்கியத்துவம் தருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு சுவாமி தரிசனம் செய்த பின், அடுத்து செல்லும் இடம் கடற்கரைகள் தான். சுற்றுலா பயணியரை வரவேற்க, மாவட்ட சுற்றுலா துறை பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

சுற்றுலா துறை உதவி இயக்குனர் குமார் நேற்று அளித்த பேட்டி:

இம்மாவட்டத்தில் மால்பே, கபு, குந்தாபுரா கடற்கரைகளில் விசை படகுகளின் சத்தத்துக்கு இடையில், பாராசைலிங், ஜெட் ஸ்கை சவாரி, வாழைப்பழ படகு சவாரி, அதிவேக படகு சவாரி போன்ற நீர்சாகசம், சுற்றுலா பயணியரின் ஆனந்தத்தை எகிற வைத்துள்ளது.

கயாக்கிங்


உப்பங்கழியில் 'கயாக்கிங்' என்னும் ஒருவர் அல்லது இருவர் படகில் துடுப்பு போட்டு செல்வது, சுற்றுலா பயணியரின் இன்பத்தை அதிகரிக்கிறது. விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு வரும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், குந்தாபுரா, மால்பே கடற்கரைக்கு சென்று விட்டு தான், ஊருக்கு புறப்படுகின்றனர்.

கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், பல்வேறு நீர் விளையாட்டுகள் துவங்கப்பட்டு உள்ளன.

ஹேஜாமடி, மறவந்தே, சாலிகிராமம் போன்ற இடங்களில் காயாகிங் வசதிகள் உள்ளன.

சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மூன்று முதல் நான்கு அடி ஆழம் உள்ள தண்ணீரில் மட்டுமே காயாக்கிங் விளையாட்டு அனுமதிக்கப்படுகிறது.

மால்பே கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பாலத்தில் செல்ல, வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் விரும்பி வருகின்றனர்.

சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்க, சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ஸ்கூபா டைவர்ஸ் 12 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்து விதமான பாதுகாப்பையும் பயன்படுத்தி, ஸ்கூபா டைவிங்கிற்கு அழைத்து செல்லப்படுவர். திறமையான பயிற்சியாளர்கள், முதலில் ஆழம் இல்லாத இடத்தில் பயிற்சி அளிப்பர். பின், சுற்றுலா பயணியரை, கடலில் 25 முதல் 30 அடி ஆழத்திற்கு அழைத்து செல்வர்.

மால்பே கடற்கரைக்கு வார நாட்களில் 5,000 முதல் 6,000 பேர் வருகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், 10,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

மழை காலம், புயல் எச்சரிக்கை நேரத்தில், கடற்கரைக்கு வர கட்டுப்பாடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, டிசம்பரில் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

பாதுகாப்பு


பயணியரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க, மாவட்ட நிர்வாகம் கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளன. கடற்கரைகள், உப்பங்கழி பகுதியில் உயிர் காக்கும் காவலர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

� மால்பே கடற்கரையில் ஜெட் ஸ்கை சவாரி. �  வார நாட்களிலும் குவிந்த சுற்றுலா பயணியர்.






      Dinamalar
      Follow us