கொச்சி--தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கூம்பன்பாறை வழியாக போக்குவரத்து துவக்கம்
கொச்சி--தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கூம்பன்பாறை வழியாக போக்குவரத்து துவக்கம்
ADDED : நவ 09, 2025 03:05 AM

மூணாறு: கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை யில் 13 நாட்களுக்கு பிறகு கூம்பன்பாறை வழியாக மூணாறுக்கு போக்கு வரத்து துவங்கியது.
அந்த நெடுஞ்சாலையில் கூம்பன் பாறை அருகே லட்சம் வீடு காலனி பகுதியில் அக்., 25 இரவில் மண்சரிவு ஏற்பட்டு அந்த வழியில் மூணாறுக்கு போக்கு வரத்து துண்டிக்கப் பட்டது. அதனால் அடி மாலியில் இருந்து கல்லார்குட்டி, வெள்ளத்தூவல், ஆனச்சால் வழியாக மூணாறுக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ஒரு வாகனம் கடந்து செல்லும் வகையில் சீரமைப்பு பணிகள் நடந்தன. அந்த வழியில் போக்குவரத்து துவங்கு வது குறித்து இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட், நிபுணர் குழு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வட்டார போக்கு வரத்து அதிகாரி, எஸ்.பி., ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி பல்வேறு கட்டுப்பாடு களுடன் 13 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் போக்குவரத்து துவங்கியது.
கட்டுப்பாடு: மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ரோட்டில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பஸ் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் ஒரு வழியாக விட வேண்டும். அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வட்டார போக்கு வரத்து அதிகாரி, எஸ்.பி., செய்ய வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் உத்தரவு வரும் வரை சரக்கு, கனரக வாக னங்கள் செல்ல அனுமதி இல்லை என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

