ADDED : ஏப் 03, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
தொழில்நுட்ப வசதிகள், நடைமுறை மாற்றங்கள், பயிற்சி முறைகள் போன்றவற்றின் வாயிலாக நம் நாட்டில் நிகழும் ரயில் விபத்துகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 400லிருந்து 81 ஆக குறைந்துள்ளன.
ரயில்வே அமைச்சர்களாக லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இருந்த காலக்கட்டங்களில், ஆண்டுதோறும் முறையே 700, 400, 385 என, ரயில் விபத்துகள் பதிவாகின. ஆனால், கடந்த நிதியாண்டில் 81 விபத்துகள் மட்டுமே பதிவாகின.
இவ்வாறு அவர் கூறினார்.

