டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணம் மாற்றியமைப்பு; 215 கி.மீ வரை பயணித்தால் ஏதும் மாற்றமில்லை!
டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணம் மாற்றியமைப்பு; 215 கி.மீ வரை பயணித்தால் ஏதும் மாற்றமில்லை!
UPDATED : டிச 21, 2025 01:03 PM
ADDED : டிச 21, 2025 01:02 PM

நமது சிறப்பு நிருபர்
நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 215 கி.மீ வரை பயணித்தால் கட்டணத்தில் ஏதும் மாற்றமில்லை.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
* நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை.
* சாதாரண வகுப்பில், 215 கிமீ வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு ஏதும் கிடையாது.
* முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில், 215 கிமீக்கு மேல் பயணிப்போருக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிப்பட்டு உள்ளது.
* 215 கி.மீ தூரத்திற்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி, ஏசி இல்லாத வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிமீக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
* கட்டண உயர்வால் இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்.
* ஏசி இல்லாத பெட்டிகளில் 500 கி.மீ பயணத்திற்கு, பயணிகள் 10 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
* கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அதிகம் கவனம் செலுத்துகிறது. இதன் விளைவாக செலவு ரூ. 1,15,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25ம் ஆண்டில் மொத்த செயல்பாட்டுச் செலவு 2,63,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
* அதிக செலவினங்களை சமாளிக்க, பயணிகள் கட்டணத்தில் ஒரு சிறிய அளவு மாற்றம் செய்யப்படுகிறது.
* இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சரக்கு போக்குவரத்து ரயில்வேயாக மாறியுள்ளது.
சமீபத்தில் பண்டிகைக் காலங்களில் 12,000க்கும் மேற்பட்ட ரயில்களை வெற்றிகரமாக இயக்கப்பட்டு இருக்கிறது.
* தனது இலக்குகளை அடைவதற்காக, ரயில் சேவைகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

