மகன் குடும்பத்தினரை எரித்து கொன்ற தந்தைக்கு 'துாக்கு'
மகன் குடும்பத்தினரை எரித்து கொன்ற தந்தைக்கு 'துாக்கு'
ADDED : அக் 31, 2025 01:14 AM

மூணாறு:  உடும்பனுார் அருகே மகன் குடும்பத்தினரை தீவைத்து எரித்து கொன்ற தந்தைக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டம், உடும்பனுார் அருகே சீனிகுழியைச் சேர்ந்தவர் ஹமீது, 82. இவரது மகன் முகம்மது பைசல், 45, மனைவி ஷீபா, 40. இந்த தம்பதியின் மகள்கள் மெஹ்ரீன், 16, ஹஷ்னா, 13, ஆகியோருடன் வசித்தார்.
அவர்களை வீட்டினுள் பூட்டி வைத்து, 2022 மார்ச் 19 நள்ளிரவில் ஹமீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அவர்களை கொலை செய்தார்.
முன்னதாக, அவர்கள் தப்பிவிடக் கூடாது என வீட் டின் கதவுகளை வெளிப்புறமாக தாழிட்டவர், மோட்டாரின் மின் இணைப்பை துண்டித்ததுடன், தொட்டியில் இருந்த தண்ணீரையும் வெளியேற்றி, கொலையை அரங்கேற்றினார்.
சொத்து தொடர்பாக தந்தை, மகன் இடையே ஏற்பட்ட தகராறில், மகன் குடும்பத்தினர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டனர். தொடுபுழா போலீசார், ஹமீதை கைது செய்தனர்.
தொடுபுழா முட்டம் ஒன்றாம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், ஹமீதுக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிபதி பாலன் தீர்ப்பளித்தார்.

