தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திரிணமுல், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பிக்கள் கட்சிதாவல் விவகாரம்: விரைவில் சபாநாயகர் முடிவு

திரிணமுல், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பிக்கள் கட்சிதாவல் விவகாரம்: விரைவில் சபாநாயகர் முடிவு

திரிணமுல், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பிக்கள் கட்சிதாவல் விவகாரம்: விரைவில் சபாநாயகர் முடிவு


ADDED : ஜூன் 24, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பிக்கள் அணி மாறியது குறித்த விவகாரத்தில் மழைகால கூட்டத்தொடருக்கு முன்பு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு எடுக்க உள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தனி அணியாக செயல்பட்டு, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கு மம்தா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி, சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதிருப்தி எம்பிக்களும் அவர்களது விளக்கத்தை கொடுத்துள்ளனர்.

அதேபோல், மஹாராஷ்டிராவில் உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனாா எம்பிக்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம் பெற்றுள்ளார்.

இந்த இரண்டு விவகாரங்களிலும், மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னர் ஓம்பிர்லா தனது முடிவை அறிவிப்பார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்லிமென்ட்ட் தொடர்புடைய சட்டம் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களை கையாளும் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது பரிந்துரையை அளித்த பிறகே, சபாநாயகர் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளார்.

எடுக்கப்படும் முடிவுகள் சட்டப்படியாகவும், அரசியலமைப்பின்படியும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற விவகாரங்களில் கடந்த முந்தைய சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளும் பரிசீலனை செய்யப்படும்.

ஜூலை மாத பிற்பகுதியில் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us