நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி: ராகுல் பேச்சு
நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி: ராகுல் பேச்சு
ADDED : பிப் 17, 2024 05:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று (பிப்.,17) பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் மேற்கொண்டார். அப்போது அவர் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
குடாலியா பகுதியில் மக்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகளை ஊடகங்கள் காட்டுவதில்லை. நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி. பணக்காரர்களும் ஏழைகளும் வெவ்வேறு இந்தியாவில் வாழ்கிறார்கள்.
இந்தியா அன்பின் நாடு, வெறுப்பின் நாடு அல்ல. சகோதரர்களுக்கு இடையிலான மோதலால் நாடு பலவீனமடையும். யாத்திரையில் நான் ஒருபோதும் வெறுப்பை பார்த்ததில்லை; ஆர்எஸ்எஸ், பாஜ.,வினர் கூட நடைபயணத்தில் இணைகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.