சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்
சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்
ADDED : ஜன 24, 2025 11:44 PM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றவுடன், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை உடனடியாக துவக்கினார்.
மெக்சிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன், அங்கு தீவிர கண்காணிப்பை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவை சேர்ந்த, 'ட்ரென் டி அரகுவா' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து தண்டனை பெற்றவர்கள் உட்பட, சட்ட விரோதமாக குடியேறிய, 538 பேரை டிரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது.
மேலும், நுாற்றுக்கும் மேற்பட்டோரை ராணுவ விமானம் வாயிலாக நாடு கடத்தி உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான நாடு கடத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

