
அய்யப்பன் மீது பக்தி இருப்பது போல் போலியாக நடித்து அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்திய அரசு, தற்போது சபரிமலை மண்டல பூஜை காலத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய, 18 மணிநேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். எங்கும் எதிலும் சுகாதாரம் இல்லை. கூட்டத்தை சரியாக கையாளவில்லை.
சதீஷன் கேரள எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
தவறான முடிவு!
பீஹார் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி நேர்மையாக போட்டியிட்டது. ஜாதியை, ஹிந்து - முஸ்லிம் அரசியல் விளையாட்டை, ஓட்டு பண பட்டுவாடாவை நாங்கள் செய்யவில்லை. 4 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகள் பெறுவோம் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் நான் போட்டியிடாதது தவறான முடிவாக இருக்கலாம்.
பிரசாந்த் கிஷோர் நிறுவனர், ஜன் சுராஜ்
அரசு பணம் விளையாடியுள்ளது!
பீஹார் தேர்தல் தந்த முடிவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். முன்பு ஆளும் கட்சிகள் தங்கள் பண பலத்தை பயன்படுத்தி தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தின. இப்போது அரசின் பொது நிதியைப் பயன்படுத்தி மக்களின் ஓட்டுகளை திசைதிருப்புகின்றன. இதனால்தேர்தல்களை வெல்லும் சவால் பல மடங்கு அதிகரித்துள்ளது.
மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்

