போலி மருந்துகள் தயாரித்து விற்பனை; டில்லியில் இருவர் கைது
போலி மருந்துகள் தயாரித்து விற்பனை; டில்லியில் இருவர் கைது
ADDED : டிச 14, 2025 11:29 AM

புதுடில்லி: போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேரை டில்லி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சட்டவிரோத இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட், குஜராத் உட்பட 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டில்லியில் போலி மருந்துகள் விற்பனை நடக்கிறது என்பது தெரியவந்தது. அதன் படி, டில்லியில் பல்வேறு இடங்களில் டில்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த கவுரவ் பகத் மற்றும் ஸ்ரீ ராம் என்ற விஷால் குப்தா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலிமருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பின்னணியில் இருக்கும் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

