ADDED : ஆக 03, 2025 11:55 PM

பாலக்காடு:
பாலக்காடு அருகே, போக்சோ வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு முதலமடை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகன் 30. இவர் கடந்த ஆக. 1ம் தேதி கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்குட்பட்ட 6 வயது சிறுமியை, இனிப்பு வகைகள் வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸ் படையினர் ஆறுமுகனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், 32. இவர் கடந்த ஆக. 1ம் தேதி செர்ப்புளச்சேரி போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்குட்பட்ட எட்டு வயது சிறுமியை, கடைக்கு செல்லும் போது பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பியோடிய சிறுமி, பெற்றோரிடம் இத்தகவலை தெரிவித்தார்.
பெற்றோர் அளித்த புகாரில், செர்ப்புளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் பினு தாமசின் தலைமையிலான போலீஸ் படையினர், மன்சூரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.