தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 200 ரூபாய்க்காக கொலை இரு சிறுவர்கள் கைது

200 ரூபாய்க்காக கொலை இரு சிறுவர்கள் கைது

200 ரூபாய்க்காக கொலை இரு சிறுவர்கள் கைது


ADDED : டிச 13, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜாப்ராபாத்: வடகிழக்கு டில்லியில் வழிப்பறி செய்தபோது, ஒருவரை கத்தியால் குத்திக் கொன்ற இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மவுஜ்பூரில் உள்ள புஜா மாதிரி பள்ளி அருகே புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை, ஸ்கூட்டரில் வந்த இரு சிறுவர்கள் வழிமறித்தனர். பணம் பறிக்க முயன்றபோது, அவர் மறுத்துள்ளார்.

இதனால் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரிடம் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு இருவரும் தப்பினர்.

படுகாயமடைந்த அவரை மீட்கப்பட்டு, ஜே.பி.சி., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, 16 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 ரொக்கம், கத்தி, திருடப்பட்ட ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us