தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,


UPDATED : ஜூன் 22, 2025 11:44 AM

ADDED : ஜூன் 22, 2025 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2025 11:44 AM ADDED : ஜூன் 22, 2025 11:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை என்.ஐ. ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமானது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜூன் 22) என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பஹல்காமில் கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் ஆவர். பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் தெரிந்தே மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளனர்.

அவர்கள் துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 22ம் தேதி, மதியம் சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொன்றனர். இது இதுவரை நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும். பஹல்காமில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us