ADDED : ஜன 09, 2025 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பெங்களூரில் தலைமறைவாக இருந்த நந்து கும்பலைச் சேர்ந்த இரண்டு ஷார்ப் ஷூட்டர்களை டில்லி போலீசார் கைது செய்தனர்.
ஹரியானாவில் நடந்த மூன்று கொலை வழக்குகளில் கபில் சங்வான் என்ற நந்து கும்பலைச் சேர்நம்த சாஹில் என்ற போலி, விஜய் கெலாட் ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.
ஹரியானா, உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களை சிறப்பு படை போலீசார் தேடினர். இந்நிலையில் பெங்களூரில் அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
குறிப்பிட்ட பகுதியில் புதன்கிழமை இரவு இருவரையும் சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்கள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

