ADDED : ஜன 29, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா: விஜயபுரா மாவட்டத்தில் நேற்று அதிகாலை 12:22 மணிக்கும், 1:20 மணிக்கும் விஜயபுரா நகரம், பசவனபாகேவாடியில் உள்ள மனகோலி டவுனில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை உணர்ந்த அப்பகுதி மக்கள், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சில வினாடிகள், நில நடுக்கம் நீடித்தது. வீட்டில் இருந்த சில பொருட்கள் கீழே விழுந்தன. அதிகாலை வரை மக்கள் வீட்டுக்குள் செல்லாமல், சாலையிலேயே பொழுதை கழித்தனர்.
ரிக்டர் அளவு கோலில் 2.9 நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ., இந்த நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
தகவல் அறிந்த மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் நிபுணர்கள், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சென்று ஆய்வு செய்தனர்.
இம்மாவட்டத்தில், கடந்தாண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.