ADDED : ஜன 22, 2025 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கபுர்தலா:பஞ்சாப் மாநிலத்தில், மரத்தில் பைக் மோதி இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கபுர்தாலா மாவட்டம் மெஹ்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரப்தீப் சிங், ஜஷன் பிரீத் சிங் மற்றொருவர், நேற்று முன் தினம் இரவு ஒரே பைக்கில் சென்றனர். ராம்கர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மரத்தில் மோதியது. மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரப்தீப் சிங் மற்றும் ஜஷன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த அவர்களின் நண்பர், ஜலந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், இருவர் உடல்களும் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

