உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 26, 2026 07:51 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: கட்டிக் கொண்டிருந்த வீடு இடிந்து இருவர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு டில்லி, மிலன் கார்டனில் மனோஜ் குமார் என்பவர், புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம் மாலை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, கட்டடம் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து, தேசிய மற்றும் டில்லி மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இரவு முழுதும் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்த சந்தர்பால்,60, அவரது மகன் விஜய் குமார்,33, ஆகியோர் உடல்கள் இன்று (அக்.,26) அதிகாலையில் மீட்கப்பட்டன. இடிபாட்டுக்குள் சிக்கியுள்ள மேலும் ஒருவரை மீட்கும் பணி நடக்கிறது.
