ADDED : ஆக 14, 2026 09:53 PM
கராச்சி: பாகிஸ்தானில், சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின், 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கராச்சியில் உள்ள மக்கள், துப்பாக்கியைக் கொண்டு வானை நோக்கி சுட்டு, சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போலீசார், 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது, சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
