தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அடுக்கு மாடியில் தீ மும்பையில் இருவர் பலி

அடுக்கு மாடியில் தீ மும்பையில் இருவர் பலி

அடுக்கு மாடியில் தீ மும்பையில் இருவர் பலி


ADDED : ஆக 12, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை, ஆக. 13–

மஹாராஷ்ராவின் தலைநகர் மும்பையில் 12 மாடி கட்டடதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இரண்டரை வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவி மும்பையில் உள்ள வில்லேபார்லே பகுதியில் சாந்தா பவன் என்ற 12 மாடி கட்டடம் உள்ளது. இதில் 11வது மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அருகேயுள்ள மற்றொரு வீட்டுக்கும் பரவியது.

இதில் இரு வீடுகளில் இருந்த, ‘ஏசி’, மின் இணைப்பு மற்றும் மின்சாதனங்கள் போன்றவை எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று அதிகாலை 1:00 க்கு தீயை அணைத்தனர்.

எனினும் தீயணைப்பு வீரர்கள் இருவர் உட்பட எட்டு பேர் தீயில் சிக்கி காயமடைந்தனர். இதில், குழந்தை அபீர், இளம்பெண் அங்கிதா, 23, ஆகியோர் உயிரிழந்தனர்.

‘ஏசி’யில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என விசாணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us