ADDED : பிப் 29, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி: ஜார்க்கண்டில் விரைவு ரயிலில் இருந்து கீழே இறங்கிய பயணியர் இருவர், எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பீஹாரின் பாஹல்பூரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி சென்ற ஆங்கா விரைவு ரயில், ஜார்க்கண்டில் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கலாஜாஹரியா ரயில் நிலையம் அருகே நேற்று மாலை வந்தது.
அப்போது, ரயில் பெட்டி ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் பரவியது. இதனால் அதில் பயணித்தவர்கள் சிலர் கீழே இறங்கி தப்ப முயன்றனர். அப்போது, எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படுகாயமடைந்த பலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

