ADDED : ஏப் 23, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரோஸ்பூர்:பஞ்சாப் மாநிலத்தில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவரை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பினர்.
பஞ்சாபின், பெரோஸ்பூர் மஞ்சித் அரண்மனை அருகே ஒரு கடைக்குள், நேற்று முன் தினம் மாலை, முகமூடி அணிந்த இருவர் புகுந்தனர். கடைக்குள் இருந்த பஸ்தி நிஜாம்தீன் பகுதியைச் சேர்ந்த ஷல்லு என்பவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷல்லு அதே இடத்தில் உயிரிழந்தார்.
அதேபோல, மகசினி கேட் அருகே பாரத் நகரைச் சேர்ந்த ரிஷப் என்பவரை சுட்டுக் கொலை செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

