தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாக்.,கிற்கு உளவு பார்த்த இருவர் கைது

பாக்.,கிற்கு உளவு பார்த்த இருவர் கைது

பாக்.,கிற்கு உளவு பார்த்த இருவர் கைது


UPDATED : அக் 16, 2026 08:33 PM

ADDED : அக் 16, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 08:33 PM ADDED : அக் 16, 2026 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அமராவதி: பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பணியாற்றும், ஏஞ்சல் பாயல் என்ற பெண், ஆந்திராவின் விசாகபட்டினம் கடற்படை தளத்தில் பணியாற்றும் இன்ஜினியர் பொங்கு ரவி என்பவருடன், 2023ல், ‘பேஸ்புக்’ சமூகவலைதளம் மூலம் நண்பரானார். ரவியை ஆசை வார்த்தை கூறி கவர்ந்த அந்த பெண், விசாகபட்டினம் கடற்படை தளத்தில் உள்ள கப்பல்கள், நீர்மூழ்கிகளின் புகைப்படங்களை பெற்றார்.

இதற்காக, ரவிக்கும், அவரது நண்பர் கடாரி சீனிவாசுக்கும் பெரும் தொகையை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். இந்த விவகாரத்தில், 13 கடற்படை வீரர்கள் உட்பட 18 பேர் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் ரவியை கைது செய்த போலீசார், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு கடந்த ஆண்டு தப்பி சென்ற கடாரி சீனிவாசை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்நிலையில் கடந்த 11ல் டில்லி விமான நிலையத்திற்கு வந்த சீனிவாசை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us