தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செயல்படுத்தாத திட்டங்களை ஆதாரத்துடன் கூட முடியுமா? நாராயணசாமிக்கு அன்பழகன் கேள்வி

செயல்படுத்தாத திட்டங்களை ஆதாரத்துடன் கூட முடியுமா? நாராயணசாமிக்கு அன்பழகன் கேள்வி

செயல்படுத்தாத திட்டங்களை ஆதாரத்துடன் கூட முடியுமா? நாராயணசாமிக்கு அன்பழகன் கேள்வி


UPDATED : அக் 16, 2026 08:50 PM

ADDED : அக் 16, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 08:50 PM ADDED : அக் 16, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்பழகன் படம் வைக்கவும்

புதுச்சேரி: அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்பதை நாராயணசாமி ஆதாரத்துடன் எடுத்துக் கூற முடியுமா என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர், கூறியதாவது: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களையும் ஆட்களையும் விலைக்கு வாங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியள்ளார். இவர், எம்.எல்.ஏ., தேர்வு செய்யப்படாமலேயே முதல்வராக ஆன பிறகு எம்.எல்.ஏ., விலைக்கு வாங்கி அவரது பதவியை ராஜினாமா செய்து, இவர் தேர்தலில் நின்றதை மறந்து விட்டார்.

பணம் கொடுத்தால் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற தத்துவத்தை புதுச்சேரியில் முதன் முதலில் கொண்டு வந்தவர் நாராயணசாமி. சட்டசபை அறிவிக்கப்பட்ட எண்ணற்றத் திட்டங்களும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல்வேறு நல திட்ட உதவிகளும் தங்கு தடை இன்றி மக்களை சென்றடைய முதல்வர் ரங்கசாமி உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக போதிய நிதிஆதாரம் இல்லாமல் முதல்வர் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார் என, குறை கூறுகிறார்.

அறிவித்த திட்டங்கள் எது செயல்படுத்தவில்லை என்பதை நாராயணசாமி ஆதாரத்துடன் எடுத்துக் கூற முடியுமா? தற்காலிக சபாநாயகராக உள்ளவர் நிரந்தர சபாநாயகராக செயல்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். என்னுடைய திறமை குறித்து நாராயணசாமியின் பாராட்டுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us