தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

அரசு ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

அரசு ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது


UPDATED : அக் 16, 2026 08:20 PM

ADDED : அக் 16, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 08:20 PM ADDED : அக் 16, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே அரசு ஊழியரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன், 57:. இவர் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சேந்தநத்தம் கிராமத்தில் ஊசுடேரி பாசன வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

அப்போது சேந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பழனி, 28, துார்வாரும் பணியை தடுத்து பணியில் இருந்த முருகையனை ஆபாசமாக திட்டி கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

இது குறித்து முருகையன் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, பழனியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us