நவோதயா தேரிவு நிலை தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
நவோதயா தேரிவு நிலை தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
UPDATED : அக் 16, 2026 08:20 PM
ADDED : அக் 16, 2026 08:16 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நவோதயா வித்யாலயாவில் தெரிவு நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால வரம்பு வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நவோதயா வித்யாலா இங்கி வருகிறது. வரும் 2027–28 ம் கல்வியாண்டில், 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க காலவரம்பு நிர்வாக காரணங்களுக்காக வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வாளர்கள் www.navodaya.gov.in இணைய மூலம் விண்ணப்பிக்கலாம் என, அவர் தெரிவித்துள்ளார்.
