ADDED : ஜன 12, 2025 10:57 PM

உத்தவ் தாக்கரே ஒரு காலத்தில் நம்பிக்கையுடன் பேசினார். ஆனால், தற்போது அவரது பலம், நம்பிக்கை குறைந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. அவரால் எதுவும் சாதிக்க முடியாது.
நாராயண் ரானே, மூத்த தலைவர், பா.ஜ.,
பா.ஜ.,வுக்கு பாடம் புகட்டுங்க!
டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடிசை பகுதிகளையும் இடித்து விடுவர். அக்கட்சியினருக்கு ஏழை மக்களின் நலனை விட, நிலம் கையகப்படுத்துதல் தான் முக்கியம். சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி
ஒளிவது ஏன்?
டில்லியில் கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி கேட்டால், சம்பந்தமே இல்லாமல் வேறொரு விஷயத்தை பேசி, அவர் மழுப்புகிறார். எத்தனை நாளைக்கு தான் அவர் இப்படி ஓடி ஒளிய போகிறார்?
ஹர்தீப் சிங் பூரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,