உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 07, 2026 08:28 PM
ADDED : அக் 07, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட, 12 பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது.
இதில், செர்ஹிவ் என்ற பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குண்டு விழுந்ததில், நான்கு குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரஷ்யா ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை வாயிலாக தகவல் தெரிந்தும், இத்தாக்குதலை உக்ரைனால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
