ADDED : மே 29, 2025 11:44 PM

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்காத பிரதமர் மோடி, எமர்ஜென்சியின், 50வது ஆண்டை குறிக்கும் வகையில் சிறப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்; அவரது, 11 ஆண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
அரசியல் லாபம்!
மத்திய பா.ஜ., அரசு பல்வேறு மாநிலங் களில் நடக்க உள்ள தேர்தல்களில் அரசியல் ஆதாயம் பெற 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை பயன்படுத்து கிறது. அனைத்து கட்சி எம்.பி.,க்கள் மத்திய அரசுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மேற்கு வங்கத்தை விமர்சிப்பது அதிருப்தி தருகிறது.
மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் திரிணமுல் காங்கிரஸ்
மாற்றத்துக்காக பிறந்த கட்சி!
தெலுங்கு பேசும் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பிறந்த கட்சி தான், தெலுங்கு தேசம். ஆட்சியையும், கட்சியையும் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எங்கள் கட்சியை மாதிரியாக கொள்ளலாம். எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியை மாதிரியாக எடுத்து ஆராயலாம்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்