நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
UPDATED : மார் 06, 2024 10:45 AM
ADDED : மார் 06, 2024 10:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான 16.5 கி.மீ தூரத்திலான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என கூறப்படுகிறது.


